ascoril syrup uses in tamil நெஞ்சுசளியைக் குணப்படுத்தும் அஸ்காரில் சிரப் பற்றி தெரியுமா? முதல்ல இதைப் படியுங்க...
ஆரோக்யமே பாதுகாப்பு. ஒவ்வொருவரும் அவரவர்களுடைய உடல் ஆரோக்யத்தில் தினமும் அக்கறை கொள்ள வேண்டும்.நோய் முற்றிய பின் அலைவதை விட வரும் முன் காக்க பாருங்க.
HIGHLIGHTS
ascoril syrup uses in tamil
மனிதர்களாக பிறந்தவர்கள் எவருமே நோய் நொடியால் பாதிப்படையவில்லை என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. அந்த வகையில் ஏதாவது ஒரு நோய் தாக்கத்தினால் பாதிப்படைபவனே மனிதன்.
இது மழைக்காலம். மழைக்காலம் என்றாலே சளிக்கு குஷி. எல்லோரிடமும் ஒட்டிக்கொள்ளலாம் என சந்தோஷம் பாடும். அதுவும் குழந்தைகள், வயதானவர்கள் என்றால் உடனே ஒட்டுவாரொட்டி. ஒருசிலருக்கு சில் கிளைமேட் வந்துவிட்டாலோ மூக்கில் சளி ஒழுக ஆரம்பித்துவிடும். பின்னர் ஆவிபிடிப்பது என்ன? இவர்களாவே மாத்திரை சாப்பிட கொடுப்பது என்ன? ஆனால் ஒரு சிலருக்கு எது செய்தாலும் குணமாகாது. டாக்டரிடம் சென்று அவர் மருந்து , மாத்திரை கொடுத்ததை சாப்பிட்டால்தான் நான் போவேன் என்று அடம்பிடிக்கும் சளிகளும் உண்டு. அதுபோன்ற சளிகளை துரத்த இந்த அஸ்காரில் சிரப் நல்ல பலனைக் கொடுக்கிறது.
ascoril syrup uses in tamilஇருமலை விரட்டியடிக்க தயாரிக்கப்பட்ட அருமருந்து இது. ஆனால் இருமல் இருந்தால் சளியும் இருக்குமே. இரண்டையும் விரட்டியடித்துவிடும் இம் மருந்து. மேலும் இருமலினால் ஏற்படக்கூடிய தொற்றுகளிலிருந்தும் இம் மருந்து நோயாளிக்கு பாதுகாப்பினை தருகிறது.
இருமலில் 2 வகைகள் உண்டு. அவையாவன. வறட்டு இருமல் அல்லது நெஞ்சு இருமல். வறட்டு இருமலானது எந்தவித கோழையையோ அல்லது சளியையோ உருவாக்காது. ஆனால் நெஞ்சு இருமல் ஆகியவை கோழை, மற்றும் சளியினை உருவாக்கும்.
இம்மருந்தானது குய்பெனிசன், குளோரோபெனிரமைன் மாலேட், மற்றும் புரோமோஹெக்சைன் ஹைட்ரோகுளோரைடு ஆகியவைகளின் கலவை ஆகும். இதில் குய்பெனிசனானது காற்று செல்லும் வழிக்கான திரவத்தின் அளவை அதிகரி்க்கும் வேலையை செய்யும். மேலும் சளியின் அளவை குறைப்பதோடு காற்று செல்லும் வழியிலுள்ள சளியை முற்றிலும் அகற்றுகிறது. குளோரோபெனிரமைன் மாலேட் ஹிஸ்டமைனின் செயல்பாடுகளை தடுத்து அலர்ஜியிலிருந்து பாதுகாக்கிறது. புரோமோ ஹெக்சைன் ஹைட்ரோகுளோரைடு இது சளியின் அளவை குறைத்து இருமலை அகற்றுகிறது.
முன்னெச்செரிக்கை
ascoril syrup uses in tamilடாக்டர்கள் பரிந்துரைக்காமல் இந்த மருந்தினை நாமாகவே வாங்கி சாப்பிடக்கூடாது. உங்களுடைய உடல் ஆரோக்ய நிலைமையை கருத்தில் கொண்டு டாக்டர் எவ்வளவு அளவு சாப்பிடவேண்டும் என பரிந்துரைப்பார்.
ஒருசில நோயாளிகள் குமட்டல், வாந்தி, தலைவலி, உலர்ந்தவாய், துாக்கம் , உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிப்படைந்தால் அதனை டாக்டரிடம் முன்னதாகவே சொல்லிவிடவேண்டும். ஆனால் இம்மருந்து அதிகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது இருந்த போதிலும் பிரச்னைகள் வந்தால் உடனடியாக டாக்டரை சந்தித்து விடவேண்டும்.
அதேபோல் நீங்கள் அலர்ஜியால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் டாக்டரிடம்சொல்லி விடவேண்டும். கர்ப்பிணிகள், அல்லது பாலுாட்டும் தாய்மார்கள் உள்ளிட்டோரும் இதுகுறித்து டாக்டரிடம் முன்னதாகவே சொன்னால்தான் அதற்கு தகுந்தாற்போல் உங்களின் மருந்தின் அளவை நிர்ணயித்து சொல்வார். மேலும் ஹைபர்டென்சன், ஹைபர்தைராயிடிசம்,உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தாலும் சொல்லி விட வேண்டும். மேலும் நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தாலும், டாக்டரிடம் சொல்லிவிடுதல் நலம். மேலும் நீங்கள் வேறு ஏதேனும் நோய்களுக்காக மருந்து , மாத்திரை சாப்பிடுபவராகஇருந்தாலும் அதனையும் டாக்டரிடம் முன்னதாகவே சொல்லிவிட்டால் அதற்கு தகுந்தாற்போல் டாக்டர் உங்களுக்குபரிந்துரைக்க இயலும். பக்க விளைவுகளில் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, தலைவலி, சொறி அல்லது வயிறு கோளாறு ஆகியவை அடங்கும்.
மருந்து உட்கொள்ளும் முறை
ascoril syrup uses in tamilகுழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான மருந்தின் அளவு அவர்களின் மருத்துவ நிலையைப் பொறுத்து உங்கள் டாக்டரால் தீர்மானிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவு 200 முதல் 400 மி.கி ஆகும், தேவைக்கேற்ப ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரு நாளின் அதிகபட்ச மருந்தளவு ஒரு நாளைக்கு 2.4 கிராம் அளவுக்கு அதிகமாகக் கூடாது.மருந்தை பயன்படுத்தும் முன் சிரப் பாட்டிலை நன்கு குலுக்க வேண்டும். மேலும் டாக்டர் உங்களுக்கு பரிந்துரைத்த அளவினை அளவு கப்பில் விட்டு உட்கொள்ள வேண்டும்.