சீக்கிரமா நீங்க நோயாளி ஆகணுமா? அப்போ 'பாஸ்ட் புட்' சாப்பிடுங்க...

உடல் ஆரோக்கியத்தை விட, நாவின் சுவை மனிதர்களை மதி இழக்க செய்கிறது. வீட்டில் சமைக்கும் உணவு எந்தெந்த சமையல் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். ஆனால், 'பாஸ்ட் புட்' உணவகங்களில் தரப்படும் உணவு, எந்த மாதிரியான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது என்றே, பலருக்கும் தெரியாது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சீக்கிரமா நீங்க நோயாளி ஆகணுமா? அப்போ பாஸ்ட் புட் சாப்பிடுங்க...
X

‘பாஸ்ட் புட்’ பிரியரா நீங்க..? அப்போ ஆபத்து உங்களுக்குதான்...!

நமது உணவு பழக்கம்தான், நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. நல்ல ஆகாரம்தான், உடலை வலிமையாக்குகிறது. உடல் நலனை பாதுகாக்கும் உணவுகளை மறந்து விட்டு, மனிதன் துரித உணவுகளை தேடி செல்வது, இன்று அதிகரித்து வருகிறது.


பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்பட்ட 'ஜங்க் புட்' உண்ண சுவையாக இருப்பதனால், இன்றைய காலக் கட்டத்தில், மக்கள் அதனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கும் அதை வாங்கி தந்து, அந்த ருசிக்கு குழந்தைகளை பழக்கி விடுகின்றனர். நாளடைவில், அந்த வகை உணவுகளே, குழந்தைகளுக்கு நிரந்தர உணவாகி விடுகிறது."ஜங் புட்" களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதட்டம், உடல்பருமன் ஏற்படுகிறது என தெரிய வந்துள்ளது. இந்த வகை உணவுகள் அதிகம் கொழுப்புச்சத்து கொண்டவை.

குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுகின்றன.இதனால் உடல்பருமனில் துவங்கி, எல்லா வகையான வியாதிகளும் வரிசைகட்டி நிற்கின்றன.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில வகை உணவுகளை உட்கொள்வதால் அறிவு மழுங்குகிறது எனவும் மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது. இனிப்பு பதார்த்தங்கள், பல வியாதிகளை உடலுக்கு கொண்டு வருகின்றன. மூளை, ஞாபக சக்தி ஆகியவற்றை கெடுக்கிறது. இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு கற்பதில் குறைபாடு உண்டாகிறது. இனிப்பினால் சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேற்கூறிய வியாதிகள் அனைத்தும் வருகின்றன.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது நலம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செயற்கை இனிப்புகளை நாடுகின்றனர். அதில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் எடை குறைய வாய்ப்புண்டு. இருப்பினும் உடலுக்கு வேறு பல தீங்குகள் ஏற்படுகின்றன. மூளை பாதிப்பு, செயல்பாட்டில் மந்தம் ஆகியவை ஏற்படுகின்றன.


குறிப்பாக நூடுல்ஸ், பீட்ஸா, பிரைட் ரைஸ், அசைவ உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப் பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள நரம்பு செல்களை மெதுவாக பாதித்து அழிக்கிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதனால் சிறந்த எண்ணெய் வகைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன. வறுத்த உணவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இந்த மாதிரியான 'ஜங்புட்' உணவுகளிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் 'அல்சீமர்ஸ்' போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பலர் உயிரிக்கவும் நேரிடுகிறது. இதனை தவிர்த்து, இயற்கையான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.


வீடுகளில் தயார் செய்யப்படும் உணவு வகைகள் உடலுக்கு ஆரோக்கியமானவை; இயற்கையான தானியங்களால் செய்யப்படும் உணவுகள், உடலை வலிமை செய்பவை. பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் இயற்கை உணவுக்கு மாற வேண்டும். அதை தவிர்த்து, 'பாஸ்ட் புட்' உணவை உட்கொள்ள துவங்கினால், நாளடைவில் பல்வேறு நோய்களை எதிர்கொள்ள நேரிடும். சீக்கிரமாக நோயாளியாகி விடலாம்.

Updated On: 5 Sep 2022 1:17 PM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
  5. அரசியல்
    டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
  6. துறையூர்
    திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
  7. டாக்டர் சார்
    Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
  8. ஆன்மீகம்
    Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
  9. லைஃப்ஸ்டைல்
    Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
  10. அவினாசி
    அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...