பற்கள் பராமரிப்பில் இத்தனை அலட்சியமா? பல் வலியில் எத்தனை ரகங்கள் இருக்குதுன்னு தெரியுமா?

பற்களை பராமரிப்பதில் பலருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே நிஜம். பற்களை துலக்கினால் மட்டுமே போதும் என்பது, பற்களை மட்டுமே சுத்தமாக, சுகாதாரமாக வைக்கும். ஆனால், பற்களை பலமாக, ஆரோக்கியமாக பராமரிப்பது மிகவும் முக்கியம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பற்கள் பராமரிப்பில் இத்தனை அலட்சியமா? பல் வலியில் எத்தனை ரகங்கள் இருக்குதுன்னு தெரியுமா?
X

உணவை ருசித்து சாப்பிட உதவும் பற்கள், பலவீனமானால், எதையுமே சாப்பிடத் தோணாது. பற்களின் வலியை, அனுபவித்தவர்களால், அதை உணர முடியும். (கோப்பு படம்)

‘பல் வலியும், தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்’ என்று சொல்வதுண்டு. பல் வலி வந்தால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அந்த பல் வலி பொதுவாக பற்களில் சொத்தையால் மட்டும் வரக்கூடியது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பல் வலியில் பல வகைகள் உண்டு. அந்த வகைகள் என்னென்ன காரணங்களால் உண்டாகும் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.


பல் வலி வெறும் பற்சொத்தையால் மட்டும் உண்டாவது கிடையாது. பல் வலி உண்டாவதற்கு வாய்ப் பகுதியில் ஏற்படும் பல காரணங்களால் ஏற்படுகிறது. அதுதவிர மற்ற சில காரணங்களாலும் பல் வலி உண்டாகும் இந்த பல் வலி ஆரம்பித்துவிட்டால், நாள் முழுக்க எந்த வேலையும் செய்ய முடியாது. சாப்பிடவும் முடியாமல் நிறைய சிரமப்படுவர். இதை எப்படி எதிர்கொள்வது என்பதை தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.

பல் வலியின் வகைகள்

பல் வலி பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. இந்த பல் வலி மொத்தம் 5 வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

1. பல் சொத்தை தொடர்பான பல் வலி,

2. ஈறுகள் சம்பந்தப்பட்ட நோய்கள்,

3. பற்களில் ஏற்பட்ட காயங்களால் ஏற்படுவது,

4.தாடைகளில் ஏற்படும் பிரச்சினையால் உண்டாவது,

5. பற்களை கடிப்பது மற்றும் இறுக்குவது,


பல் சொத்தை காரணமாக ஏற்படும் பல் வலி

​பல் சொத்தை மற்றுமு் பல் சிதைவு என்பது ஆகியவை பற்களின் உட்புறமும் உள்ள துவாரங்களில் தான் உண்டாகிறது. நம்முடைய வாயில் பாக்டீரியா உற்பத்தியால் அமிலத்தை உற்பத்தி செய்யும் போது ஏற்படுகிறது, இது பற்சிப்பி அரிப்பை ஏற்படுத்துகிறது.

இதைத் தவிர்க்க

ஒரு நாளைக்கு தினமும் இரண்டு முறை பல் துலக்குவது மற்றும் தினமும் மௌத்வாஷ் கொண்டு வாஷ் செய்வது, வாரத்தில் இரண்டு முறை ஆயில் புல்லிங் செய்வது போன்றவற்றை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் பல் சிதைவைத் தடுக்க உதவுகிறது. ப்ளோரைடு இல்லாத டூத் பேஸ்ட் பயன்படுத்துவது, சர்க்கரை, அமிலத்தன்மை கொண்ட உணவுகள் மற்றும் கார்பனேட்டட் பானங்களை உட்கொள்வதைத் தவிர்ப்தன் மூலம் பற்சிதைவைத் தடுக்க முடியும்.

ஈறு நோய் தொடர்பான பல்வலி

​​ஈறு மற்றும் ஈறு தொடர்பான நோய்கள்என்பவை பற்களைச் சுற்றியுள்ள திசுக்களில் உண்டாகக் கூடிய தொற்றுக்களால் ஏற்படுவது. இந்த தொற்றுக்கள் அதிகரிக்கும் போது ஈறுகளில் எரிச்சல் மற்றும் வலி உண்டாவதோடு பற்களிலும் வலியை ஏற்படுத்தும்.

இதைத் தவிர்க்க

தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, குறிப்பிட்ட இடைவெளிகளில் பல் டாக்டரை சந்தித்து பற்களை சுத்தம் செய்வது, சாப்பிட்டதும் மறக்காமல் வாய் கொப்பளித்தல் போன்றவற்றை செய்வதன் மூலம் ஈறுகள் தொடர்பான பல் வலி வராமல் தவிர்க்க முடியும்.


பற்களில் ஏற்படும் காயங்களால் உண்டாகும் பல்வலி

உறுதியான, கடினமாக உணவுப் பொருள்களைப் பற்களால் கடிப்பது, வாய்க்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தாமல் அடிபடும் வகையில் விளையாடுவது, எதிர்பாராமல் விழுவதால் தாடை மற்றும் பற்களில் காயங்கள் ஏற்படுவது ஆகியவை காரணமாகவும் பற்களில் காயங்கள் ஏற்படும். இதன் காரணமாகவும் பல் வலி உண்டாகலாம்.

இதைத் தவிர்க்க

காண்டாக்ட் ஸ்போர்ட்ஸில் பங்கேற்கும் போது வாய்க்கும் பற்களுக்கும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவது, பற்களை பாதிக்கும்படியான கடினமான உணவுப் பொருள்களைக் கடிப்பதை தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் பல் காயம் மற்றும் சேதங்கள் ஏற்படாமலும் அதனால் ஏற்படும் பல் வலியையும் தவிர்க்க முடியும்.


TMJ கோளாறுகள் தொடர்பான பல்வலி

டிஎம்ஜே கோளாறுகள் என்பது ‘டெம்போரோ மாண்டிபுலர் மூட்டு’ என்று பொருள். தாடையை மண்டையோட்டுடன் இணைக்கும் மூட்டுகளை பாதிக்கும் நிலைகளைத் தான் TMJ கோளாறுகள் என்று குறிப்பிடுவர். இந்த கோளாறுகள் ஏற்படும் போது தாடை, முகம், கழுத்து மற்றும் பற்களில் கூட வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனாலும் கடுமையான பல் வலிஏற்படக் கூடும்.

இதைத் தவிர்க்க

இந்த அதிக மன அழுத்தத்தில் இருக்கும் சூழ்நிலைகளின்போது, தாடைகளை இறுக்குவது, பற்களைக் கடிப்பது ஆகியவற்றைச் செய்யக்கூடாது.


பற்களை கடிப்பதால் ஏற்படும் பல்வலி

சிலர் தங்களுடைய பற்களின் நுனிப்பகுதியை மேல் பற்களோடு மோதி இடித்துக் கொண்டே இருப்பார்கள். அதேபோல பற்களைக் கடிப்பது ஆகிய பழக்கம் அடிக்கடி உள்ளவர்களுககு இந்த பல் வலி உண்டாகும்.

இதைத் தவிர்க்க

மன அழுத்தத்தைக் குறைத்தல், தூங்கும் முறையை மாற்றுவது, மவுத்கார்டு அணிதல் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்வதால் மூச்சுத் திணறலை கட்டுப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இந்த வகை பல் வலி ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

Updated On: 11 Feb 2023 1:41 PM GMT

Related News