/* */

காபி பிரியரா நீங்கள்? காபைன் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்...

காபி பிரியர்கள் காபியில் உள்ள காபைன் குறித்தும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

காபி பிரியரா நீங்கள்? காபைன் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்...
X

காபி. (மாதிரி படம்).

நம்மில் பலர் தினமும் காபி அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளோம். சிலர், தொடர்ந்து காபி அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாக உள்ளனர். தொடர்ந்து காபி அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள், காபியில் உள்ள காபைன் பொருள் போதை தரக்கூடியதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை தெரிந்து கொள்வோம்:

காஃபியில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி-2 தவிர வேறு எந்த ஊட்டச்சத்துக்களும் பெரிய அளவில் கிடையாது. நூறு கிராம் காஃபியில் 40 மில்லி கிராம் காஃபைன் உள்ளது. காபி அருந்துவது வாழ்நாளில் நீட்டிக்கின்றதா என்பது குறித்து, கிட்டத்தட்ட 14 முதல் 28 ஆண்டுகள் வரை நடைபெற்ற ஆய்வின் போது, இறப்பு சற்று தள்ளிப் போவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கர்ப்பிணித் தாய்மார்கள் காஃபியினை அளவிற்கதிகமாக அருந்தினால், குழந்தை இறந்து பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதுபோல கருக்கலைவதற்கும் வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணி தாய்மார்கள் காஃபியினை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது, கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த சோகையும், பிறக்கின்ற குழந்தைக்கு ரத்த சோகையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காஃபைன் அதிகமாக உள்ள காஃபியை அருந்தும் போது, கருத்தரிப்பு தாமதமாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணித் தாய்மார்கள் ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் என்ற அளவிற்கு மேல் காஃபைன் உள்ளவாறு காஃபி அருந்தினால், கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சி குறைவடையும் மற்றும் எடை குறைந்த குழந்தையாக பிறப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

மாதவிடாய் நின்ற பெண்கள் அதிக அளவில் காஃபி அருந்தினால், எலும்பு இழப்பு (Bone loss) ஏற்படலாம் அதனால் எலும்பு முறிவும் ஏற்படலாம். காஃபைன் அதிகமாக சாப்பிடுவதினால், ஆண்களுக்கு விந்தணுவின் நகர்தலில் தொய்வு ஏற்படும் (decrease in the sperm movement). காஃபி அதிகமாக அருந்துவதினால், செரிமான மண்டலத்தின் அசைவுகள் குறைய வாய்ப்புள்ளது மற்றும் வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாகும்.

காஃபைன் உலக சுகாதார அமைப்பின் முக்கியமான மருந்துகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. எனவே, இது போதை மருந்து அல்ல. காஃபைன் லேசான சார்பு நிலையை உருவாக்க வாய்ப்பு உள்ளது. அதுபோல் திரும்பப் பெறுதல் அறிகுறிகளும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. பிரிட்டிஷ் உணவு பாதுகாப்பு துறை அதிகபட்ச அளவாக தினம் 400 மில்லி கிராம் வரை காஃபைன் எடுத்துக்கொள்ளலாம் என்று நிர்ணயத்துள்ளது. கர்ப்பிணி தாய்மார்கள் தினம் 200 மில்லி கிராமுக்கு அதிகமாகாமல் காஃபைனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நிர்ணயித்துள்ளது.

ஒரு கப் காஃபியில் 80 முதல் 175 மில்லி கிராம் வரை காஃபின் இருக்க வாய்ப்புள்ளது. அது எந்த வகையான காஃபியை பயன்படுத்துகின்றோம் என்பதை பொறுத்தது. கண்டிப்பாக காஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு அடிமைத்தனத்தை, காஃபியில் உள்ள காஃபைன் ‘ஏற்படுத்தாது’. ஆனாலும், மருத்துவ உலகில், ‘காஃபைன் அடிமையை’ ஒரு நோயாக வரையறுக்கப்பட்டுள்ளது.

காஃபியை வரையறுக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், ‘காஃபினிஸம்’ என்ற நோய் ஏற்படும் என்று ஒரு ஆய்வுக் கட்டுரை பதிவு செய்துள்ளது. அதன் அறிகுறிகளாக அமைதியின்மை, பதற்றம், எரிச்சல், கிளர்ச்சி, தசைநடுக்கம், தூக்கமின்மை, தலைவலி, செவியில் சத்தம் கேட்பது உள்ளிட்ட உணர்வுத் தொந்தரவுகள், படபடப்பு உள்ளிட்ட இதய அறிகுறிகள் மற்றும் வயிற்றுப்புண் ஆகியவை கருதப்படுவதாக மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 27 April 2023 4:24 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. குமாரபாளையம்
  மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 5. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 6. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 7. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 9. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 10. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி