தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் அசிக்ளோவிர் மாத்திரைகள்..

Acyclovir Tablet Uses in Tamil
X

Acyclovir Tablet Uses in Tamil

Acyclovir Tablet Uses in Tamil-நமக்கு உடல் நலமில்லாத போது டாக்டர்களிடம்சென்று சிகிச்சை மேற்கொள்கிறோம்.அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உரிய கால இடைவெளிகளில் எடுத்துக்கொண்டால்தான் நோய் குணமாகும்.

Acyclovir Tablet Uses in Tamil

மனிதர்களைத் தாக்கும் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே டாக்டர்களிடம்சென்று காட்டுவது நலம் பயக்கும். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் ஆரம்ப கட்டத்தில் அலட்சியமாக இருந்துவிட்டு பின்னர் நோய் முற்றிய பின் அலறி அடித்து ஓடினாலும் நோயின் தீவிரம் குறைய வாய்ப்பில்லை.பெரும்பாலானோர் டாக்டர்களிடம் சிகிச்சைக்கு சென்றாலும் அவர் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை அந்தந்த கால இடைவெளிகளில் முழுமையாக உட்கொள்வதில்லை. இதனால் நோயானது அவருக்கு தீராததாகவே இருக்கும். அவரவர்களின் ஆ ரோக்யமானது அவரவர்களின் கையில்தான் உள்ளது. குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் உங்கள் உடலில் நடக்கும் மாறுபட்ட செயல்களை நீங்கள் வெளியே சொன்னால்தான் தெரியுமே தவிர மற்ற நேரங்களில் குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்தாலும் அவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை. எனவே உங்கள் உடலியல் பிரச்னைகளை அவ்வப்போது குடும்பத்தாருக்கும் தெரிவிப்பது நல்லதே.

அசிக்ளோவில் மருந்தானது சிற்றக்கி என்சிலபாலிட்டிஸ், தோல் தொற்றுநோய்கள், படர்சவ்வுப் படல தொற்று, நோய் எதிர்ப்பு திறன் நோயாளிகள், சிற்றக்கி வைரஸ்தொற்று, சின்னம்மை பாதிப்பு கண்டவர்கள், ஆரம்ப அத்தியாய ஹெர்பஸ் ஜெனிடலிஸ், பிறந்த நிலையிலுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் சிற்றக்கி வைரஸ் தொற்று, உள்ளிட்ட நோய்களுக்கு இதனை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பக்கவிளைவுகள்

Acyclovir Tablet Uses in Tamil

இம்மருந்து உட்கொள்ளும்போது நம்மில் ஒரு சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. சில பக்க விளைவுகள் அரிதானவை. ஒரு சில நேரங்களில் தீவிரமாக கூட இருப்பதுண்டு. இதுபோன்ற நேரங்களில் நீங்கள் உங்கள் டாக்டரிடம் செல்லும்போது இதுகுறித்து சொல்லிவிடவேண்டும்.

குமட்டல், காய்ச்சல், தலைவலி, வலி, புறநீர்க்கட்டு,காப்புபிறழ்ச்சிகள், வயிற்றுப்போக்கு, இரைப்பை பிரச்னை, தாழழுத்தம், வாஸ்குலட்டிஸ், லுகோபீனியா, நிணச்சுரப்பி புற்று, உயர்ந்த கல்லீரல் செயல்பாடு, ஹெபடைடிஸ், ஹைபர்பிலிருபினிம்யா, மஞ்சள் காமாலை, தசைப்பிடிப்பு நோய், ஆகியவைகளை இம் மருந்து சாப்பிடும்போது உணர்ந்தால் உடனே டாக்டரிடம் சென்று தகவல் தெரிவிக்கவும்.

முன்னெச்செரிக்கை

டாக்டரிடம் நீங்கள் ஏற்கனவே வேறு நோய்களுக்கு ஏதேனும் மருந்து உட்கொண்டாலும் அதனைப் பற்றிய தகவல்களை தெரிவித்துவிடவேண்டும். உங்களுக்கு அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் அதனையும் தெரிவித்துவிடுவது நலம். ஒரு சில நேரத்தில் சில சுகாதாரநிலைமைகள் உங்களுக்கு பக்க விளைவுகள் நேரும் வாய்ப்புகளை அதிகம் தரலாம். அதுமட்டும் அல்லாமல் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்யத்துக்காக வைட்டமின் மருந்துகள், மற்றும் மூலிகை மருந்துகள் ஏதேனும் உட்கொண்டாலும் அதனைப்பற்றிய தகவல்களை டாக்டரிடம் தெரிவிப்பது நல்லது.

அசிக்ளோவிர் மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைக்காமல் நாமாகவே உபயோகப்படுத்த கூடாது. சிற்றக்கி என்சிபாலிட்டிஸ், மற்றும் தோல் தொற்று நமக்கு இருந்தாலும் அதனை முறையாக டாக்டரிடம் சென்று காண்பித்து அவர் பரிந்துரைத்த பின்னரே இந்த மருந்தினை நாம் உட்கொள்ள வேண்டும்.

Acyclovir Tablet Uses in Tamil

இந்த மருந்தினை உபயோகிக்கும்போது கனரக வாகனங்களை இயக்கலாமா? என்றால் இதனால் ஏற்படும் பக்க விளைவுகளான தலைச்சுற்றல், அயர்வு, உயர் ரத்த அழுத்தம், அல்லது தலைவலி உள்ளிட்டவைகள் ஏற்படும் பட்சத்தில் வாகனத்தினை பாதுகாப்பாக ஓட்ட முடியாது. மருந்து சாப்பிடும்போது மயக்கம் அல்லது ரத்த அழுத்தத்தை குறைக்கிறது என்றால் நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது.மதுவானது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இம்மருந்து சாப்பிடுவோர் மதுஅருந்த கூடாது என்றும் டாக்டர்கள் ஆலோசனை அளிக்கின்றனர்.

கூடுதல்டோஸ் எடுக்கலாமா?

ஒருவேளை இந்த மருந்தை உட்கொள்ளாவிட்டால் அடுத்த வேளை சாப்பிடும்போது கூடுதலாக எடுத்துக்கொள்ளலாமா? என்றால் அப்படி எடுக்க கூடாது. அடுத்த வேளை அட்டவணை படிதான்தொடர வேண்டும். தவறவிட்டதை ஈடுசெய்ய கூடுதல் டோஸ் எடுக்க கூடாது. அதேபோல் டாக்டர்கள் பரிந்துரைத்த கால இடைவெளியில் மருந்தினை உட்கொள்ள வேண்டும். கூடுதலாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story