/* */

தமிழகத்தில் 66 சதவீத பேருக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி

தமிழகத்தில் 66.2%பேருக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அதிகபட்சமாக விருதுநகரில் 84%, குறைந்த பட்சமாக ஈரோட்டில் 37% நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் 66 சதவீத பேருக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி
X

கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி

தமிழகத்தில் 66 சதவீத பேருக்கு கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அதிகபட்சமாக விருநகரில் 84 சதவீதமும், குறைந்த பட்சமாக ஈரோட்டில் 37 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது இரண்டு வகையில் பெறப்படுகிறது. ஒன்று இயற்கையானது. மற்றொன்று செயற்கையானது. நோய் பாதிப்பு ஏற்படும்போது அதனை எதிர்க்க உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு போரிடும் செல்களை உருவாக்கும். இந்த செல்கள் உள்ளே நுழைந்துள்ள கெட்ட வைரஸ்களை அழிக்கும். இதன் காரணமாக நோய் விட்டு போகும். இது இயற்கையானது.

இதேபோன்று, தடுப்பூசி செலுத்தும்போது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். பின்னர் வைரஸ்களை அவை அழிக்கும். அதனால் தான் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

இயற்கையாக உருவாகும் எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி மூலம் உருவாகும் எதிரான நோய் எதிர்ப்பு சக்திகளே அதிக காலம் நம் உடலில் இருக்கின்றன. இயற்கை முறையில் நான்கு மாதங்கள் நீடித்தால், தடுப்பூசி முறையில் ஒரு வருடம் நீடிக்கிறது. கொரோனாவுக்கு எதிராகவும் இதுபோன்ற எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும்.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உடலில் இந்த வகை எதிரான நோய் எதிர்ப்பு சக்தி தோன்றியிருக்கும். இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றுள்ளார்கள் என்று ஆய்வு செய்யப்பட்டது.


இந்தியா முழுவதும் 70 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பரிசோதிக்கப்பட்ட்டனர். 11 மாநிலங்களில் குறைந்தது 3 ல் இரு பங்கு மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை (ஆன்டிபாயாட்டிக்) பெற்றுள்ளனர் என்பது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இவற்றில் அதிக அளவாக மத்திய பிரதேசத்தில் 79% மக்கள் கொரோனாவுக்கு எதிரான எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். இதில் மிக குறைவாக கேரளாவில் 44.4% மக்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றுள்ளனர். இந்த விகிதம் தமிழகத்தில் 66% என்ற அளவில் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக விருநகரில் 84 சதவீதமும், குறைந்த பட்சமாக ஈரோட்டில் 37 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 July 2021 9:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’