கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பதில் திடீர் சிக்கல்

கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பதில் திடீர் சிக்கல்
X

கருணாநிதி பேனா நினைவு சின்ன மாதிரி படம்

Karunanidhi Statue -சென்னை மெரினா கடற்கரையிில் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Karunanidhi Statue -தி.மு.க. தலைவர் கருணாநிதி 2018 ஆகஸ்டு மாதம் 7- ந்தேதி மரணம் அடைந்தார். இந்த நாளை தி.மு.க. தொண்டர்களால் மறக்க முடியாது. அவர் உடல் சென்னை மெரினா கடற்ரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் அந்த இடத்தில் நினைவு சின்னம் கட்டும் பணி ஏற்கனவே நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் அந்த நினைவுச் சின்னம் அருகிலேயே கடற்கரையில் பிரம்மாண்டமாக கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேனா நினைவு சின்னம் அமைக்க சில அரசியல் கட்சினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இயல் இசை நாடகத் தமிழுக்கு கருணாநிதி அளித்த பங்களிப்பை நினைவுகூறும் வகையில் பேனா நினைவு சின்னத்தை அமைப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்த பேனா நினைவுச்சின்னம் மொத்தம் 81 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. இதன் உயரம் 42 மீட்டர். அதை சுற்றி அலங்கார பூக்கள், செடிகளுடன் அழகிய தோட்டமும் அமைக்கப்பட உள்ளது

இந்த பேனா நினைவு சின்னம் கடற்கரையில் அமைக்கப்படுவதால் இதற்கு மத்திய அரசின் அனுமதி கண்டிப்பாக வேண்டும். இதற்காக தமிழக அரசு மத்திய அரசின் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருந்தார்கள். கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அமைப்பதற்காக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகம் இந்த கடிதத்தை பரிசீலித்து. இதற்காக கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான மதிப்பீட்டு குழு தமிழக அரசின் கடிதத்தை பரிசீலனை செய்தது.

இந்த நிலையில் இது குறித்து தமிழக பொதுப்பணித் துறைக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சகம் புதிய கடிதம் அனுப்பி உள்ளது. அதில் சில நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்த நினைவு சின்னத்தை அமைக்க விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்வதற்காக நிபந்தனைகளை மத்திய அரசு வழங்குகிறது. அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனையின்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்பிக்க வேண்டும். அந்த இடத்தில் கடலில் ஏற்படக் கூடிய பேரிடர் மற்றும் அப்படி பேரிடர் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிப்பது தொடர்பான வரைவு அறிக்கையும் அளிக்கப்பட வேண்டும்.

மேலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணையில் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக கூறப்பட்டுள்ளபடி அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும். நினைவு சின்னம் அமைக்கப்படும் போது மீன் உள்பட கடல்வாழ் உயிரினங்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் மீன்பிடி படகுகளின் போக்குவரத்து, மீன்பிடி நடவடிக்கையில் ஆகியவற்றின் மீது ஏற்படும் தாக்கங்களை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நினைவு சின்னம் அமைக்கப்படும் பகுதியில் கடலின் ஆழத்தை அதிகப்படுத்துவதற்காக அங்கு கடலில் தோண்டும் நடவடிக்கைகளில் முழு விவரம் சமர்ப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு இறுதி அறிக்கையை இந்திய தரக்குழு நியமிக்கும் ஆலோசகர்களை வைத்து தயாரிக்க வேண்டும். இந்த இறுதி அறிக்கையை 4 ஆண்டுகளுக்குள் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதிக்காக அளிக்க வேண்டும்.

இவ்வாறு நிபந்தனைகள் மத்திய அரசு விதித்துள்ளது. இதனால் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு முட்டுக்கட்டை ஏற்படுத்துகிறது என்று தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. எந்த தடை வந்தாலும் அதை தகர்த்து கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் உறுதியாக உள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
Weight Loss Tips In Tamil