புனலூரில் கேரள மாநில திமுக செயற்குழு கூட்டம்

புனலூரில் கேரள மாநில திமுக செயற்குழு கூட்டம்
X

கேரள மாநில திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன்.

கேரள மாநில திமுக செயற்குழு கூட்டம் புனலூரில் நடைபெற்றது.

கேரள மாநில திமுக செயற்குழு கூட்டம் புனலூரில் நடைபெற்றது. கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி அமைப்பாளர் பிரின்ஸ், துணை அமைப்பாளர் ஹரிகுமார், சிற்றார்ரவிச்சந்திரன், மோகன்தாஸ், மாம்பழத்துறை சலீம், மாவட்ட செயலாளர்கள் பாலக்காடு ஜாபர், இடுக்கி ஜனார்தனம், திருவனந்தபுரம் சப்பாத்துராஜன், சங்கர், வர்;தகர் அணி முகமது ஷாபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொல்லம் மாவட்ட செயலாளர் ரெஜிராஜ் வரவேற்றார்.

எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் வக்கீல் பரந்தாமன், முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து மாற்றுக்கட்சியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு திமுக வேஷ்கள் வழங்கப்பட்டது. மேலும் புதிய உறுப்பினர் அட்டைகளை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் பரந்தாமன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இக்கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளான பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அய்யம்பெருமாள், ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் தங்கச்செல்வம், மாவட்ட மகளிர் அணி தலைவி பேபி பார்த்திமா, மாவட்ட பிரதிநிதிகள் ஸ்டீபன் சத்யராஜ், அன்பழகன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வெங்கடேசன், துணை அமைப்பாளர் சொட்டு சுப்பிரமணியன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா சிங்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, கீழப்பாவூர் பேரூர் பொருளாளர் தெய்வேந்திரன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய ஓட்டுனர் அணி அமைப்பாளர் மாயாண்டி,ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், சுந்தரி மாரியப்பன்,மகேஷ்வரி சத்யராஜ், கடையம் வடக்கு ஒன்றிய இலக்கியப் பகுத்தாய்வு பிரிவு அமைப்பாளர் புங்கம்பட்டி ராஜபாண்டி, கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கவாஸ்கர், சுரண்டை நகர இளைஞரணி அமைப்பாளர் முல்லை கண்ணன், நிர்வாகிகள் சேர்மக்கனி, அழகாபுரி அருணாச்சலம், பூதத்தான், வழக்கறிஞர் அரி, அருள் முத்துவேல், கண்ணன், ஏ.பி.என்.குணா, சேர்வைக்காரன்பட்டி நவீன் கிருஷ்ணன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் அருணா பாண்டியன் மற்றும் கேரள நிர்வாகிகள் சதாசிவன், அஜ்மல், பிஜீபனங்குன்னல், அஜிஜோன், அச்சுபிலால், ரினுராஜன். மகேஷ்மாயா, சம்நாத், ராஜேஸ்ராஜன், பசுலுதீன்,ஷாலினி, கீதாகிருஷ்ணன், சரோஜாதேவி, லால்ஜிமோகன், ராணி, செய்யது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக புனலூரில் எம்.எல்.ஏ. பரந்தாமன் மற்றும் சிவபத்மநாதனுக்கு மேள, தாளம் முழங்க கேரள நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!