காதல் மனைவியை கொன்ற கணவர் போலீசில் சரண் பரபரப்பு வாக்குமூலம்

காதல் மனைவியை கொன்ற  கணவர் போலீசில் சரண் பரபரப்பு வாக்குமூலம்
X

சுரண்டை அருகே காதல் மனைவியை கொன்ற அவரது கணவர் போலீசில் சரணடைந்தார். மேலும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உச்சி பொத்தை கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி என்பவரது மகள் பூங்கோதை (22). இவர் திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த போது உடன் பணியாற்றிய ஒடிசாவை சேர்ந்த ஜோகிந்தர் என்ற வாலிபரை காதலித்து கடந்த 40 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஊர் திரும்பிய அவர்கள் சுரண்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஜோகிந்தர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். ஆனால் சரிவர வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி பூங்கோதையை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு ஜோகிந்தர் தப்பியோடினார்.இதுகுறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான தனிப்படையினர் தலைமறைவான ஜோகிந்தரை தேடி வந்த நிலையில் சுரண்டைக்கு திரும்பிய ஜோகிந்தர், விஏஓ கருப்பசாமி முன்னிலையில் சுரண்டை போலீசில் சரணடைந்தார்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் எனக்கு சரிவர வேலை கிடைக்காமல் வருமானம் இல்லாத நிலையில் என்னுடைய மனைவி பூங்கோதை அடிக்கடி அவரது பெற்றோரின் வீட்டுக்கு சென்று தங்கி விடுவார். இதனால் தனியாக வசித்த நான் சமைத்து சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். அதனால் மனைவி பூங்கோதையிடம் எனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு சென்று வசிப்போம் என்று கூறினேன். ஆனால் அவர் என்னுடன் ஒடிசாவுக்கு வர மறுத்து விட்டார். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் துணியால் மனைவியின் கழுத்தை இறுக்கி நெறித்து கொலை செய்தேன்.இவ்வாறு ஜோகிந்தர் வாக்குமூலத்தில் கூறியதாக தெரியவருகிறது.கைதான் ஜோகிந்தரை போலீசார் ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!