சாப்பிட்ட பானிபூரிக்கு காசு கேட்ட வியாபாரி : கழுத்தை அறுத்த இளைஞர்கள்

சாப்பிட்ட பானிபூரிக்கு காசு கேட்ட வியாபாரி : கழுத்தை அறுத்த இளைஞர்கள்
X

திருவொற்றியூரில் சாப்பிட்ட பானிபூரிக்கு காசு கேட்டபொழுது கழுத்தை அறுத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவெற்றியூர் வடக்கு மாட வீதி கிராம தெருவில் விரேந்தர் பால் என்பவர் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலை வழக்கம்போல் பானிபூரி வியாபாரம் செய்து கொண்டிருந்த பொழுது அவரது கடைக்கு பானிபூரி சாப்பிட வந்த மூன்று இளைஞர்கள் பானி பூரியை சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் கிளம்பினார்களாம். இதனை அறிந்த கடைக்காரர் மூன்று இளைஞர்களிடமும் சாப்பிட்டதற்கு காசுகேட்டுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த மூன்று இளைஞர்களும் குடிபோதையில் இருந்ததால் காசு தராமல் மிரட்டினார்களாம்.

அப்போது திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் கடைக்காரர் விரேந்தர் பாலின் கழுத்தில் வெட்டியுள்ளனர். விரேந்தர் பால் கூச்சலிடவே மூன்று பேரும் தப்பி ஓடியுள்ளனர் இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த திருவொற்றியூர் காவல் துறையினர் வெட்டுப்பட்ட விரேந்தர்பாலை திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.தொடர்ந்து திருவொற்றியூர் பகுதியைச் சார்ந்த ராஜ்குமார் தியாகராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சோபன் என்பவர் மட்டும் தலைமறைவாகி உள்ளதால் அவரையும் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture