முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை

முகக்கவசம் அணியாதவர்களுக்கு  கொரோனா பரிசோதனை
X
People those who not wear mask will have the covid test

பஞ்சாப் மாநிலத்தில் முகக்கவசம் அணியாத 4,400க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்வோரை ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டிருந்தார். அதை அடுத்து பஞ்சாப் மாநில காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

மேலும், முகக்கவசம் அணியாத காரணத்திற்காக 1,800 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 12,000க்கும் மேற்பட்டவர்களுக்கு போலீஸ் சார்பில் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியாமல் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராகி கூடாது என்று பொதுமக்களிடம் பஞ்சாப் மாநில காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்