மாஸ்க் இல்லைனா பெட்ரோல் இல்லை, நாளை முதல் அமல்

மாஸ்க் இல்லைனா பெட்ரோல் இல்லை, நாளை முதல் அமல்
X
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பங்குகளில் நாளை முதல் (10ம் தேதி) மாஸ்க்கு அணிந்து வரவில்லை என்றால், பெட்ரோல் வழங்கமாட்டார்கள் என தமிழக பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

06.07.2020 முதல் தமிழகத்தின் அனைத்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் முக கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் என்றும், முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்க முடியும் என்பதையும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம், கொரோனா பரவுதல் தீவிரமான இருந்த காலங்களில் தெரிவித்திருந்தது,

தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால், வருகின்ற 10.04. 2021 முதல் அதாவது நாளை முதல் மீண்டும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படும் என்பதை தமிழ்நாட்டு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துக் கொள்கின்றது. இவ்வாறு தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தலைவர் கேபி முரளி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai ethics in healthcare