திருச்சி மாநகரில் வங்கி ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாம் கலெக்டர் சிவராசு ஆய்வு
திருச்சி மாநகர் புதிய கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்த வங்கி ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து கலெக்டர் சிவராசு பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது.
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 25.05.2021 முதல் மாவட்டத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உட்பட்டோருக்கு கொரோனா வைரஸ் நோய்தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றன.
தகுதியான நபர்களான பத்திரிக்கை சார்ந்த பணியாளர்கள், செய்தித்தாள் விநியோகம் செய்யும் நபர்கள் , பால் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள்,தெரு வியாபாரிகள், மளிகை கடை பணியாளர்கள், உள்ளாட்;சி அமைப்பு ஊழியர்கள், கொரொனா பாதிப்பு ஏற்பட்ட தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வேலை செய்யும் ஊழியர்கள், மருந்தக ஊழியர்கள், ஆட்டோ., கார்,பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர் , இ- காமர்ஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு ஊழியர்கள், மாநில போக்குவரத்து பணியாளர்கள், கட்டுமானத்துறை ஊழியர்கள் மற்றம் வெளிமாநில் ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், விமான நளிலைய ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள், ஆகியோர் அடங்குவர்.
மேலும் மாநகராட்சி பகுதியில் தேவர்ஹால், ஸ்ரீரங்கம், அபிசேகபுரம், அரியமங்கலம், பொன்மலை ஆகிய கோட்ட அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி (18வயது முதல் 44 வயது வரை) முகாம் நடைபெற்று வருகிறது.
திருச்சி புறநகர் உட்பட்ட பகுதிகளில் அந்தநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி நகரம் அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி, திருச்சி மேற்கு பிஷப் ஹைமன் பிரைமரி பள்ளி,(மேலப்புதுர்), திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி, லால்குடி எல்.என்.பி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி,
துறையூர் ஜமின்தார் மேல்நிலைப்பள்ளி, முசிறி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொட்டியம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாத்தையங்கார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மருங்காபுரி அரசு மேல்நிலைப்பள்ளி (கோவில்பட்டி), மணிகண்டம் அரசு உயர் பள்ளி(எடமலைப்பட்டிபுதூர்),ஆகிய இடங்களில் (18வயது முதல் 44 வயது வரை)உள்ளவர்கள் தடுப்பூசி போட்டக்கொள்ளலாம் எனவும்,
கொரோனா வைரஸ் நோய்தடுப்பூசி போட்டுகொள்ள வரும் நபர்கள் தங்களது வேலை செய்யும் அடையாள அட்டை, மற்றும் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று (27.05.2021) காலை திருச்சி மாவட்டம் சுகாதாரத்துறையின் சார்பில் புதிய கலையரங்கம் திருமண மண்டபத்தில் வங்கி அலுவலர்கள் மற்றம் பணியாளர்களுக்கான ( 18 வயது முதல் 44 வயது வரை) உட்பட்டோர்கள் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பூசி முகாமையும் தொடர்ந்து திருச்சி மாவட்டம் மாநகராட்சிகுட்பட்ட பொன்மலைகோட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பூசி முகாமையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வங்;கி அலுவலர்களுக்கான முகாமில் 12 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், 25 தனியார் வங்கிகள். 1 திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,.1 தமிழ்நாடு கிராம வங்கி, ஆகிய வங்கிகளில் பணிபுரியும் அலுவலர்கள் (18 வயது முதல் 44 வயது வரை உட்பட்டவர்கள்)இம்முகாமில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர்.யாழினி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் .சத்தியநாராயணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் கே.வேலாயுதம், மற்றும் பலர் கலந்து கொண்டனா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu