தமிழகத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

தமிழகத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
X
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 55 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 9 பேருக்கும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும், திருவள்ளுர் மற்றும் கோவையில் தலா 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில், 34 லட்சத்து 55 ஆயிரத்து 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. அதே நேரம், இதுவரை மொத்த பலி எண்ணிக்கை, 38 ஆயிரத்து 025 ஆகும்.

இன்று, 401 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று 41 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக, சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்