தமிழகத்தில் இன்று ஒரோநாளில் 33,658 பேருக்கு கொரோனா, 303 பேர் பலி: சுகாதாரத்துறை

தமிழகத்தில் இன்று ஒரோநாளில் 33,658 பேருக்கு கொரோனா, 303 பேர் பலி: சுகாதாரத்துறை
X
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 33 ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 303 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நிலவரங்கள் குறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,658 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 65 ஆயிரத்து 035 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 2,07,789 பேர் கொரோனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் 20,905 பேர் குணமடைந்து வீடுதிருப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13, லட்சத்து 39 ஆயிரத்து 887 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 303 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். இதனால் கொரோனா தொற்றுக்கு இதுவரை 17 ஆயிரத்து 359 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!