ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
X

ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நாளை 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொரோனா தடுப்பூசி முகாம் சென்னையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் ஏற்பாட்டில் நடத்தப்படுகிறது. செய்திவாசிப்பாளர்கள்,பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடப்படும்.

கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டும் போடப்படும். கொரோனா தடுப்பூசி போட வரும் அனைவரும் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும். காலை 9 மணி முதல் 12 மணி வரை தடுப்பூசி போடப்படும். சென்னை தியாகராயநகர், துரைசாமி சுரங்கப்பாதை வலதுபுறம் பாலத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரா வங்கி அருகில்

தொடர்புக்கு: எஸ்.எம்.பிரபுதாஸன், தலைவர், தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம். (75500 70550)

Next Story
ai based agriculture in india