தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி வாங்காதவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி வாங்காதவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
X

கொரோனா நிவாரண நிதி டோக்கன் விநியோகம்( கோப்பு படம்)

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 2.07 கோடி பேருக்கு ரூ.2000 முதல் தவணை நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில் 2.58 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இன்னும் வாங்காமல் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஜூன் 14 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே திமுக ஆட்சி பொறுப்பேற்றால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என ஸ்டாலின் தனது வாக்குறுதிகளில் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மே 7ல் பொறுப்பேற்றதும் அது குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.

அதன் படி, கொரோனா நிவாரண தொகையில் முதல் தவணை தொகை ரூ.2000 அனைத்து ரேஷன் கடைகளிலும் மே 15 ஆம் தேதி முதல் மே 31 வரை வழங்கப்பட்டது. முதற்கட்டமாக 2.06 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இந்த தொகையை பெற்றுக் கொண்டனர். மீதமுள்ள 3.35 லட்சம் பேர், கொரோனா அச்சம் காரணமாகவும், உறவினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், வீட்டு தனிமையில் இருப்பவர்களும், சிலர் ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்ட காரணத்தினால் நிவாரண தொகையை வாங்க வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்களும் இம்மாதம் நிவாரண தொகையை வாங்கி கொள்ளலாம் என அரசு அவகாசம் வழங்கியது. அதன்படி நேற்று வரை 2.07 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2.58 லட்சம் பேர் வாங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 98.77 சதவிகிதம் பேர் இதுவரை கொரோனா நிவாரணம் பெற்றுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்க 4196 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இதுவரை 4,140 கோடி ருபாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி