தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உறுதி செய்யப்பட்ட புதிய வகை கொரோனா ஜே.என்.1

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உறுதி செய்யப்பட்ட புதிய வகை கொரோனா ஜே.என்.1
X
தமிழகத்தில் திருச்சி உள்பட 4 மாவட்டங்களில் புதிய வகை கொரோனா ஜே.என்.1 உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புதுவகை கொரோனா ஜே.என்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவில் ஜே.என். 1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது வேகமாக பரவி வந்தாலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாததால் பயப்பட தேவையில்லை என்கிறார்கள்.

அது போல் இந்த புதிய வகையான வைரஸ் தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றும் தெரிவிக்கிறார்கள். இது கேரளாவில் பரவி வந்த நிலையில் இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 200க்கு மேல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இத்தனை நாட்களாக ஜே.என். 1 வைரஸ் பரவல் இல்லை என சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது 4 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த 4 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டன. அவர்கள் 4 பேருக்கும் புது வகையான கொரோனா பரவியது தெரியவந்தது. அந்த 4 பேரும் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர். இந்த வகை கொரோனா வீரியம் குறைந்தது. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். காய்ச்சல், சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இந்த புதிய வகை கொரோனாவுக்கும் இருக்கும்.

கொரோனாவுக்கு அளிக்கும் சிகிச்சையே இந்த புதிய வகைக்கும் அளிக்கப்படுகிறது. மக்கள் கை கழுவுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் , கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே நோய் தீவிரமாகாமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்