தமிழகத்தில் நாளை முதல் (10-ம் தேதி) புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு
ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. இந்தியாவிலும் சில நாட்களாக கொரோனா அதிகரித்து வருகிறது. தினமும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1 லட்சம் பேர் பாதிப்படைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப். 10 முதல் தடை விதிக்கப்படுகிறது. திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
பொழுது போக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி. கல்வி, சமுதாய, பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகளில், உள் அரங்குகளில் 200 நபருக்கு மட்டும் அனுமதி.
வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதிசென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு. பேருந்து இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.
உணவகங்கள் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர்களுக்கு மட்டுமே அனுமதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu