திரும்பவும் மொதல்ல இருந்தா? அதிக பாதிப்பு தரும் நியோகோவ் கொரோனாவைரஸ்!

திரும்பவும் மொதல்ல இருந்தா? அதிக பாதிப்பு தரும் நியோகோவ் கொரோனாவைரஸ்!
X
கொரோனா வைரசின் உருமாறிய திரிபான நியோ கோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது, எளிதாக பரவி அதிக பாதிப்பை தரும் என்று, சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில், சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் முதல்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர் படிப்படியாக, இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதிலும் பரவி, மனித குலம் கண்டிராத பேரிடரை ஏற்படுத்தி இருக்கிறது. வைரஸ் உருமாற்றம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை, தற்போது மூன்றாம் அலை வரை உருவாகி, இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் அடைந்த வைரஸ், முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. டெல்டா அலை ஓய்ந்த நிலையில், கடந்த நவம்பரில் ஒமிக்ரான் என்ற வைரஸ் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டதாக உள்ளது; எனினும் உயிர்பாதிப்பு சற்று குறைவாக உள்ளது.

இந்நிலையில் தான், இன்னொரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. அது, கொரோனா வைரஸின் அடுத்த உருமாறிய திரிபான நியோகோவ் வைரஸ். இதன் தாக்கம், மிக மோசமானதாக இருக்கும் என்று, சீனாவின் வூகான் விஞ்ஞானிகள் எச்சரித்து, பீதியை கிளப்பி உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள இந்த MERS-Cov என நியோகோவ் கொரோனா, வேகமாகவும் அதிகமாகவும் தொற்றை உண்டாக்கலாம். பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளில் ஒருவர் இறக்கலாம் என்றும், விஞ்ஞானிகள் வயிற்றில் புளியை கரைக்கின்றனர்.


வுஹான் பல்கலைக்கழகம் மற்றும் சைனீஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் பயோபிசிக்ஸ் ஆகிய ஆராய்ச்சிகளின் கூற்றுப்படி மனித உயிரணுக்களில் வைரஸ் ஊடுருவுவதற்கு ஒரேயொரு பிறழ்வு மட்டுமே தேவைப்படுவதாகவும், எனவே, சுவாசக்கோளாறு அல்லது நோய்த்தடுப்பு ஊசி போட்டுக் கொண்டாலும், நியோகோவ் தொற்றுக்கு எதிராக எதையும் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள்.

சீனா ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்தது முதற்கட்ட சோதனைதான். முழுமையாக ஆய்வுத்தகவல் வெளியான பிறகுதான், நியோகோவ் வைரஸ் குறித்த முழு விவரமும் தெரியவரும்.

எனினும், ரஷ்ய நாட்டின் வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி மையத்தின் வல்லுநர்கள், சற்று ஆறுதலான தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி, மனிதர்களிடையே இவை தீவிரமாக பரவும் திறன் கொண்டது அல்ல என்பதுதான். எனினும் கொரோனாவின் புதுப்புது திரிபுகள் உண்டாகி, நம் நிம்மதியை கெடுக்கின்றன என்பதே உண்மை. சுத்தமும், சுகாதாரமுமே நம்மை காத்துக் கொள்ள, ஒரே வழி.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!