பொங்கலுக்கு பின்னர் முழுநேர ஊரடங்கு? அமைச்சர் மா.சு.வெளியிட்ட தகவல்

பொங்கலுக்கு பின்னர் முழுநேர ஊரடங்கு? அமைச்சர் மா.சு.வெளியிட்ட தகவல்
X
பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொங்கலுக்கு பின்னர் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பதற்கு, அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் தந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன், பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வார இறுதி நாளில் தற்போதுள்ள முழு நேர ஊரடங்கு, பொங்கல் பண்டிகைக்கு பின்னர், வார நாட்களிலும் அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

இந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் அளித்துள்ள பேட்டியில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு, தமிழகத்தில் முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பில்லை. அதே நேரம், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம்.
அதேபோல், ஜிம், உடற்பயிற்சிக் கூடத்திற்கு வருவோர் கட்டாயம் முககவசம், சமூக இடைவெளி இருக்க வேண்டும். லேசான காய்ச்சல், இருமல், ஜலதோஷம் இருந்தாலே அவர்களுக்கு, ஜிம் உரிமையாளர்கள் தடை விதிக்க வேண்டும். இதற்கு முழு பொறுப்பு ஜிம் உரிமையாளர் மட்டுமே.
தற்போது, தமிழ்நாட்டில் தொற்று உறுதி செய்யப்படுவோரில், 85% பேருக்கு ஒமிக்ரானும் 15% பேருக்கு டெல்டாவும் கண்டறியப்பட்டு வருகிறது. அதே நேரம், ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மீண்டும் தொற்றில் இருந்து மீண்டுவிடுகின்றனர் என்று, அமைச்சர் தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!