இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5000ஐ கடந்தது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5000ஐ கடந்தது
X
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5000ஐ கடந்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,233 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,90,282 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,345 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதன் மூலம், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,26,36,710 ஆக உள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் 1881 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மும்பையில் மட்டும் நேற்று 1242 பேருக்கு தொற்று உறுதியானது. அங்கு பிஏ 5 திரிபு கொரொனா பரவல் இருப்பதை, அந்த மாநில சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!