தமிழகத்தில் 25ம் தேதி கொரோனா புதிய உச்சமாக 15 ஆயிரத்தை தாண்டியது, 82 பேர் இறப்பு

தமிழகத்தில் 25ம் தேதி கொரோனா புதிய உச்சமாக 15 ஆயிரத்தை தாண்டியது, 82 பேர் இறப்பு
X
தமிழகத்தில் 25ம் தேதி மட்டும் ஒரே நாளில் புதிய உச்சமாக 15 ஆயிரத்து 659 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 82 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனையடுத்து அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை கொரோனா இன்றைய நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் 25ம் தேதி ஒரே நாளில் மட்டும் 15,659 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு 10,81,988ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 பேர் பலியானர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,557 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று மேலும் 11,065 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 9,63,251 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,180 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,26,298 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்தி குறிப்பல் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது