தமிழகத்தில் (19ம் தேதி) இன்று 10,941 பேருக்கு கொரோனா, 44 பேர் பலி: சுகாதாரத்துறை

தமிழகத்தில் (19ம் தேதி) இன்று 10,941 பேருக்கு கொரோனா, 44 பேர் பலி: சுகாதாரத்துறை
X
தமிழகத்தில் 19ம் தேதி இன்று ஒருநாள் மட்டும் 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 44 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (20ம் தேதி) முதல் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துகிறது. கொரோனா வைரஸ் நோயை தடுக் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,941 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 10,02,392 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 3,347 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 44 பேர் இறந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 13,157 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 6,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,14,119 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 75,116 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!