10 கோடி கொரனா தடுப்பூசி டோஸ்கள் அழிப்பு

10 கோடி கொரனா தடுப்பூசி டோஸ்கள் அழிப்பு
X
கொரனா தடுப்பூசி. கோப்பு படம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததால் 10 கோடி கொரனா தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டுள்ளன.

கொரனா என்ற கொடிய பெருந் தொற்றுநோய் 2ஆண்டுகளுக்கு மேலாக உலகத்தையே முடக்கி போட்டது. 2019டிசம்பர்மாதம் 31 ந்தேதி அன்று சீனாவின் ஊகான் மாகாணத்தில் கொரனா கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி உலக சுகாதார அமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அன்றுதான். கொரனா காற்று வழியாகப் பரவுவதை விட, மனிதன் மூச்சுவிடும் துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமே பெரும்பாலும் பரவுவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தின.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் இரண்டே மாதங்களில் கொரனா பரவியது. இந்த நோயுக்கு முதலில் மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் முழு அடைப்பு அறிவித்து மக்களை வீடுகளுக்குள்ளே முடங்க செய்வதே நோய் பரவாமல் தடுக்கும் தீர்வாக இருந்தது. இந்த நோயை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக இறங்கின. அதற்கு முன்பு மக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின. அதோடு கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இதற்கிடையே இந்த நோய் பரவுவதை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோட்டெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த தடுப்பூசிகளை மக்களுக்கு அளிக்கும் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. முதலில் டாக்டர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அடுத்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 45 வயதுக்கு மேற்பட்டோர் என திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் படிப்படியாக கொரனா அலை ஓய்ந்தது. இந்த ஆண்டு கொரனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. மக்கள் கொரனாவை மறந்து வழக்கமான பணிகளை செய்யத்தொடங்கினார்கள். முககவசம் அணிவதை கூட மக்கள் செய்வது இல்லை. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் சாலைகளில் நடந்து செல்கிறவர்கள் தூசியில் இருந்து பாதுகாத்து கொள்ள மட்டும் முககவசம் அணிந்து இருக்கிறார்கள். நோய் பாதிப்பு குறைந்து விட்டதால் கொரனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள மக்கள் கொஞ்சம் கூட ஆர்வம் காட்டவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறையினர் தடுப்பூசி முகாம் நடத்துவதையே நிறுத்தி விட்டனர். தடுப்பூசி கொள்முதலையும் மத்திய அரசு நிறுத்தி விட்டது.

இந்த நிலையில்தான் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்ததால் சீரம் நிறுவனம் ஏற்கனவே தயாரித்து வைத்து இருந்த 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் காலாவதியாகி விட்டன. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை அதனால் நாங்கள் தயாரித்து வைத்திருந்து காலாவதியான 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டன என்று சீரம் நிறுவனத்தின் அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியுள்ளார். தற்பொது கொரனா தடுப்பூசி உற்பத்தி செய்வதையே அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!