தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; இன்று 144 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு; இன்று 144 பேருக்கு தொற்று
X
தமிழகத்தில் நேற்றைய தினத்தைவிட இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெருந்தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79, பெண்கள் 65 என, மொத்தம் 144 பேர் கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, சென்னையில் 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 56,317 ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து இதுவரை 34 லட்சத்து 17,365 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 79 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. நேற்று பெருந்தொற்று பாதிப்பு 90 ஆக இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!