தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 90 ஆக குறைவு

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 90 ஆக குறைவு
X
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பு 90 ஆக குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 48 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, 107 என்ற எண்ணிக்கையில் இருந்து, 90 ஆக குறைந்துள்ளது. அதே நேரம், சென்னையில் ஒருநாள் பாதிப்பு 43 என்ற எண்ணிக்கையில் இருந்து 48 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 836 இல் இருந்து 862 ஆக உயர்ந்துள்ளது. 81-வது நாளாக தமிழ் நாட்டில் கொரோனா உயிரிழப்பு இல்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!