தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
X
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதியதாக 113 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது, முந்தைய நாளில் 145 ஆக இருந்தது. சென்னை நகரில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 58-ல் இருந்து 81 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் தொற்றுகாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 711இல் இருந்து 756 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரில் 68 பேர் குணமடைந்துள்ளனர். பெருந்தொற்ருக்கு, 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை; அமைச்சர் உறுதி..!