தமிழகத்தில் இன்று புதியதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று புதியதாக 56 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
தமிழகத்தில் இன்று புதியதாக, 56 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று இருந்ததை விட சற்று குறைந்துள்ளது. நேற்று 59 பேருக்கு தொற்று உறுதியான நிலையில்,இன்று 56 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இன்று 30 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 040 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று ஒருநாளில் 39 பேர் குணமடைந்தனர். கொரோனா பாதிப்புக்கு, இன்று புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இன்று மட்டும், 15,164 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!