இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 2,226 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 2,226 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,226 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 2,226 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,36,371 ஆக உயர்ந்தது.

தொற்றால், நேற்று மட்டும் புதிதாக 65 பேர் இறந்துள்ளனர். மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,413ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரேநாளில் 2,202 பேர் குணமடைந்துள்ளனர். எனவே, குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,97,003 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,995 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்