தமிழகத்தில் 24 மணி நேரத்தில் புதியதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் புதியதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது; 41 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், புதியதாக 77 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 32 ஆக உள்ளது.

இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,55,287 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!