அறந்தாங்கி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கெரோனா தொற்று

அறந்தாங்கி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கெரோனா தொற்று
X
எம்.எல்.ஏ. ராமச்சந்திரன்.
அறந்தாங்கி காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ. பிரபாகரனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், திருச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தற்போது சென்னையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக, நேற்று, தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை சந்தித்தவர்களில் காங்கிரஸ் எம்எல்ஏ ராமச்சந்திரனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!