தமிழகத்தில் 12ம் தேதி மட்டும் 6,711 பேருக்கு கொரோனா, 19 பேர் இறப்பு: சுகாதாரத்துறை

தமிழகத்தில் 12ம் தேதி மட்டும் 6,711 பேருக்கு கொரோனா, 19 பேர் இறப்பு: சுகாதாரத்துறை
X
தமிழகத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை 12ம் தேதி கொரோனா நிலவரும் குறித்த செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 6,711 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9,40,145ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் 2,105, செங்கல்பட்டில் 611, கோவையில் 604, திருவள்ளூரில் 333, காஞ்சிபுரம் 277, திருப்பூரில் 160 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 19 பேர் இறந்துள்ளனர். கொரோனாவால் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,927ஆக அதிகரித்துள்ளது.

2,339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,80,910 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 46,308 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!