/* */

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 2,084 பேருக்கு கொரோனா, 9 பேர் பலி : சுகாதாரத்துறை

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 2,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 9 பேர் பலியாகியுள்ளனர். அதிக பட்சமாக சென்னை மாவட்டத்தில் 775 பேருக்கு தொற்று உறுதியானது. குறைந்த பட்சமாக பெரம்பலூரில் ஒருவருக்கு தொற்று உறுதியானது என தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 2,084 பேருக்கு கொரோனா, 9 பேர் பலி : சுகாதாரத்துறை
X

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இதில் அரியலூர் மாவட்டம் - 6, செங்கல்பட்டு மாவட்டம் - 186, சென்னை மாவட்டம் - 775, கோயமுத்தூர் மாவட்டம் - 185, கடலூர் மாவட்டம் - 43, தர்மபுரி மாவட்டம் -6.

திண்டுக்கல் மாவட்டம் - 20. ஈரோடு மாவட்டம் - 32, கள்ளக்குறிச்சி மாவட்டம் --5. காஞ்சிபுரம் மாவட்டம் = 82. கன்னியாகுமரி மாவட்டம் - 22. கரூர் மாவட்டம் - 9, கிருஷ்ணகிரி மாவட்டம் - 19 பேரும். மதுரை மாவட்டம் - 38.

நாகப்பட்டினம் மாவட்டம் - 51, நாமக்கல் மாவட்டம் - 20, நீலகிரி மாவட்டம் - 19. பெரம்பலூர் மாவட்டம் - 1. புதுக்கோட்டை மாவட்டம் - 16. ராமநாதபுரம் மாவட்டம் - 6, ராணிப்பேட்டை மாவட்டம் - 24.

சேலம் மாவட்டம் - 55, சிவகங்கை மாவட்டம் - 21. தென்காசி மாவட்டம் - 7. தஞ்சாவூர் மாவட்டம் - 66, தேனி மாவட்டம் - 5, திருப்பத்தூர் மாவட்டம் - 13. திருவள்ளூர் மாவட்டம் - 110. திருவண்ணாமலை மாவட்டம் - 9. திருவாரூர் மாவட்டம் - 38.

தூத்துக்குடி மாவட்டம் - 9, திருநெல்வேலி மாவட்டம் - 26, திருப்பூர் மாவட்டம் - 59. திருச்சி மாவட்டம் - 45. வேலூர் மாவட்டம் - 18. விழுப்புரம் மாவட்டம் - 21 விருதுநகர் மாவட்டம் - 17 பேரும் என 2,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நிலை குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் புதிதாக 2,084 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,77,279ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் இறந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,659ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,52,463 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 12,157 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று 84,759 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Updated On: 27 March 2021 4:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?