தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 1971 பேருக்கு கொரோனா, 9 பேர் பலி : சுகாதாரத்துறை

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 1971 பேருக்கு கொரோனா, 9 பேர் பலி : சுகாதாரத்துறை
X
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 1971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 9 பேர் பலியாகியுள்ளனர். அதிக பட்சமாக சென்னை மாவட்டத்தில் 739 பேருக்கு தொற்று உறுதியானது. பெரம்பலூரில் இன்று தொற்று இல்லை.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இதில் அரியலூர் மாவட்டம் - 7 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் - 205 பேரும், சென்னை மாவட்டம் - 739 பேரும், கோயமுத்தூர் மாவட்டம் - 173 பேரும், கடலூர் மாவட்டம் - 25 பேரும், தர்மபுரி மாவட்டம் - 9 பேரும்.

திண்டுக்கல் மாவட்டம் - 19 பேரும். ஈரோடு மாவட்டம் - 20 பேரும். கள்ளக்குறிச்சி மாவட்டம் - 6 பேரும். காஞ்சிபுரம் மாவட்டம் - 76 பேரும். கன்னியாகுமரி மாவட்டம் - 27 பேரும். கரூர் மாவட்டம் - 7 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் - 18 பேரும். மதுரை மாவட்டம் - 18பேரும்.

நாகப்பட்டினம் மாவட்டம் - 32 பேரும், நாமக்கல் மாவட்டம் - 18 பேரும் நீலகிரி மாவட்டம் - 16 பேரும். பெரம்பலூர் மாவட்டத்தில் தொற்று எதுவும் இல்லை. புதுக்கோட்டை மாவட்டம் - 15 பேரும். ராமநாதபுரம் மாவட்டம் - 7 பேரும் ராணிப்பேட்டை மாவட்டம் - 18 பேரும்.

சேலம் மாவட்டம் - 37 பேரும் சிவகங்கை மாவட்டம் -12 பேரும். தென்காசி மாவட்டம் -5 பேரும். தஞ்சாவூர் மாவட்டம் - 111 பேரும் தேனி மாவட்டம் - 4 பேரும் திருப்பத்தூர் மாவட்டம் - 10 பேரும். திருவள்ளூர் மாவட்டம் - 107 பேரும். திருவண்ணாமலை மாவட்டம் - 13 பேரும். திருவாரூர் மாவட்டம் - 43 பேரும்.

தூத்துக்குடி மாவட்டம் - 17 பேரும். திருநெல்வேலி மாவட்டம் - 18 பேரும். திருப்பூர் மாவட்டம் - 36 பேரும். திருச்சி மாவட்டம் - 35 பேரும். வேலூர் மாவட்டம் - 27 பேரும். விழுப்புரம் மாவட்டம் - 17 பேரும் விருதுநகர் மாவட்டம் - 11 பேரும் என 1971 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நிலை குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் புதிதாக 1,971 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,75,190ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் இறந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,650ஆக உயர்ந்துள்ளது.

1,131 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,51,222 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 11,318 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று 84,676 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!