தமிழகத்தில் இன்று( 18ம் தேதி) கொரோனா 10 ஆயிரத்தை தாண்டியது, 42 பேர் பலி: சுகாதாரத்துறை
தமிழகத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக அரசு தற்போது பல கட்டுப்பாடுகளை அறிவித்து நோயின் தாக்கத்தை குறைக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 10,723 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா உள்ளவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 91 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிக பட்சமாக 3,304 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து 5,925 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா நோயிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,07,947 ஆக உள்ளது..
இன்று கொரோனா வைரஸ் தொற்£ல் 42 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13,113 ஆக அதிகரித்தது. சென்னையில் மட்டும் மொத்தம் 4,400 பேர் உயிரிழந்துள்ளனர்.
தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 70,391. மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,11,87,630. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,10,130. இவ்வாறு தமிழக பொதுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu