தமிழகத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் கொரோனா இன்று 10ம் தேதி மட்டும் 5,989 தொற்று, 23 பேர் பலி

தமிழகத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் கொரோனா இன்று 10ம் தேதி மட்டும் 5,989 தொற்று, 23 பேர் பலி
X
தமிழகத்தில் புதிதாக 5,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று 10ம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது, இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 23 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று 10ம் தேதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 5,989 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 9,26,816ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 1977, செங்கல்பட்டில் 615, கோவையில் 501, திருவள்ளூரில் 212, காஞ்சிபுரம் 181, திருப்பூரில் 154 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 23 பேர் இறந்துள்ளனர். இதுவரை மொத்த பலியானோரின் எண்ணிக்கை 12,886 ஆக அதிகரித்தது.

இன்று மட்டும் 1,952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,76,257 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 37,673 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!