அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம்

அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம்
X
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜூலை மாதம் கொரோனா 4வது அலை வரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்வது போல், கடந்த சில நாட்களாக, நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டிருக்கிறது. பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவும் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், கொரோனா அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவையில்லை. சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்கள் உடல்நிலை கண்காணித்து வருகிறோம். அவர்களின் உடல்நலம் சீராகவே உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளோம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் இதுவரை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனினும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறினார்.

Tags

Next Story