தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் எப்படி?

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் எப்படி?
X
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதியதாக 73 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் நேற்று, 42 ஆண்கள், 31 பெண்கள் என, மொத்தம் 73 பேருக்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 44 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,829 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஐஐடி மாணவர்களில் இதுவரை 6,650 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 3,782 பேரின் முடிவுகள் தெரியவந்துள்ளது. இதில் 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஐடி மாணவர்களில் 158 பேர் தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!