இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,745 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,745 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,745 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது; 2,236 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா பெருந்தொற்ரு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய நாளின் 2 ஆயிரத்து 338-ஐ விட அதிகமாகும்.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 236 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 17 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்