தமிழகத்தில் இன்று 1437 பேருக்கு தொற்று. 9 பேர் உயிரிழப்பு : சுகாதாரத்துறை
தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, குறித்து இன்று (23ம் தேதி) பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது.
தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9145 பேர். மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,86,10,138. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 75,827.
தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,69,804. இன்று மட்டும் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1437. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 532.
தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 5,25,327 பேர். பெண்கள் 3,44,442 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர். இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 860 பேர். பெண்கள் 577 பேர். இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 902 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,48,041 பேர்.
இன்று கெரோனா தொற்றினால் 9 பேர் உயிரிழந்துள்னர். 4 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள். 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்.
இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,168. சென்னையில் மட்டும் மொத்தம் 4,206 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்த மூவர் இன்று உயிரிழந்தனர். இதில் எவ்வித பாதிப்பும் இல்லாதவர் ஒருவர். இவ்வாறு தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu