தமிழகத்தில் ஒரேநாளில் 1636 பேருக்கு கொரோனா, 12 பேர் பலி : சுகாதாரத்துறை

தமிழகத்தில் ஒரேநாளில் 1636 பேருக்கு கொரோனா, 12 பேர் பலி : சுகாதாரத்துறை
X
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் (24ம் தேதி) 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் அதிக பட்சமாக 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,70,003 ஆக அதிகரித்துள்ளது.

12 பேர் உயிரிழந்த உள்ளனர் பலி எண்ணிக்கை மொத்தம் 12,630 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 24ம் தேதி 80,293 பேருக்கு கொரேனா பரிசோதனை செய்யப்பட்டது. 1,023 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனையில் 9,746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது-.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்