புதுச்சேரியில் இன்று புதிதாக 2,007 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

புதுச்சேரியில் இன்று புதிதாக 2,007 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
X

புதுச்சேரியில் இன்று புதிதாக 2,007 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 27 பேர் சிகிச்சை பலனின்றி பலி.

புதுச்சேரியில் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 20-ஐ தாண்டியே இருந்து வருகிறது. இதனால் புதுச்சேரி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 2,007 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 1,247 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 77,031 ஆகவும், உயிரிழப்பு 1,045 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 60,424 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்