தல தோனியின் சாதனையை இப்போதைக்கு யாரும் முறியடிக்க முடியாது! அசத்தல் கணிப்பு இதோ!

தல தோனியின் சாதனையை இப்போதைக்கு யாரும் முறியடிக்க முடியாது! அசத்தல் கணிப்பு இதோ!
X
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பல சாதனைகளுக்கு தோனியின் கேப்டன்சியும் ஒரு முக்கிய காரணம். இதுவரை 200 போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிய சாதனையை வேறு எந்த வீரரும் முறியடிக்க வாய்ப்பு இல்லை.

ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக 200க்கும் அதிகமான போட்டிகளில் கேப்டனாக விளையாடுகிறார். இந்த தொடர் முழுவதும் விளையாடும்பட்சத்தில் அவர் நிச்சயம் 210 போட்டிகளில் விளையாடியிருப்பார். இது மிகப்பெரிய சாதனையாகும் 41 வயதான தோனி போல யாரும் இந்த வயதில் இத்தனை ஃபிட்டாக இருப்பது மிக கடினம். விராட் கோலி மாதிரி ஒரு சிலரே அந்த அளவுக்கு உடல் திறனுடன் இருப்பார்கள். அவர்களும் இப்போது கேப்டனாக இல்லாத நிலையில், 200 போட்டிகள் ஒரே அணிக்கு விளையாடுவதே சாத்தியம் இல்லாமல் போய்விடும்.

சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக தோனி விளையாடியதன் மூலம் ஒரே அணிக்கு கேப்டனாக 200 போட்டிகள் விளையாடிய ஒரே வீரர் எனும் பெருமையைப் பெற்றார் மகேந்திர சிங் தோனி. சென்னை அணிக்கு கேப்டனாக 14வது சீசனில் விளையாடி வரும் தோனி தலைமையில் இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் கைப்பற்றியுள்ளார். 11 முறை சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பல சாதனைகளுக்கு தோனியின் கேப்டன்சியும் ஒரு முக்கிய காரணம். இதுவரை 200 போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிய சாதனையை வேறு எந்த வீரரும் முறியடிக்க வாய்ப்பு இல்லை. ஒரே அணிக்காக ஆடிய வீரர்கள் என்று பார்த்தால் தோனி தவிர விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர்தான் அதிக போட்டிகளில் ஒரே அணிக்காக விளையாடியிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் விராட் கோலி இப்போது கேப்டனாக இல்லை. ரோஹித் சர்மா ஆரம்பத்தில் கேப்டனாக இல்லை. அதுமட்டுமின்றி ரோஹித் சர்மாவுக்கு ஃபிட்னஸ் பிரச்னை காரணமாக அவர் எத்தனை நாள் இன்னும் கேப்டனாக தொடர்வார் என்பது தெரியாது.

சராசரியாக 25 வயதில் ஒருவர் கேப்டனாக இருந்தால் அவர் 14 சீசன்கள் அடுத்த 14 வருடங்களுக்கு அவர் தொடர்ந்து விளையாடினால்தான் 200 போட்டிகளில் விளையாட முடியும். இது மிகப்பெரிய விசயம் இது இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

Tags

Next Story