எளிமையாக வென்ற ஹைதராபாத் அணி! போராடி தோற்ற கொல்கத்தா!

எளிமையாக வென்ற ஹைதராபாத் அணி! போராடி தோற்ற கொல்கத்தா!
X
KKR Vs SRH IPL 2023 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதனால் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர். ஹைதராபாத்தின் ஹாரி புரூக் மற்றும் மயாங்க் அகர்வால் தங்களது ஆட்டத்தை துவங்கினர்.

IPL 2023 KKR vs SRH Live Score : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதனால் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர். ஹைதராபாத்தின் ஹாரி புரூக் மற்றும் மயாங்க் அகர்வால் தங்களது ஆட்டத்தை துவங்கினர்.

ஆண்ட்ரூ ரஸல் வீடிய 5வது ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் மயாங்க். அவர் 13 பந்துகளைச் சந்தித்து 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதியும் அதே ஓவரில் 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த எய்டன் மார்க்ரம், புரூக் இணை சரமாரியாக அடிக்கத் துவங்கியது. இவர்களது இணை மிகப் பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது.

இந்த இணை 13 வது ஓவரின் கடைசி பந்தில் பிரிந்தது. மார்க்ரம் வருண் சக்ரவர்த்தி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 26 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து அபிஷேக் ஷர்மா களமிறங்கினார். 19வது ஓவர் வரை இவர்களை பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கிடையில் புரூக் தனது சதத்தை கடந்தார். அவர் 55 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார். 12 பவுண்டரிகளையும் 3 சிக்ஸர்களையும் விளாசியிருந்தார். கடைசியில் ஹென்ரிச் கிளாஸன் 6 பந்துகளுக்கு 16 ரன்கள் எடுக்கவே ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 228 ரன்களை எட்டியது.

229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கொல்கத்தாவின் துவக்க ஆட்டகாரர்களாக ரஹமானுல்லா குர்பாஸ், நாரயணன் ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கியிருந்தனர். புவனேஷ்வர்குமார் வீசிய முதல் ஓவரின் 3 வது பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார் குர்பாஸ். அவரைத் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார்.

வெங்கடேஷ் ஐயர், நாராயணன் ஜெகதீசன் ஆகியோர் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் நன்றாக விளையாடிய நிலையில், 11 பந்துகளைச் சந்தித்து 10 ரன்கள் எடுத்திருந்த வெங்கடேஷ் அவுட் ஆகி வெளியேறினார். இப்போது சுனில் நரேனும் வந்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதன்பிறகு கேப்டன் நிதிஷ் ராணா களமிறங்கினார். 75 ரன்கள் எடுத்திருந்த அவர் நடராஜன் பந்து வீச்சில் அவுட் ஆக, கொல்கத்தாவின் நம்பிக்கை தளர்ந்தது. கடைசியாக ரிங்கு சிங், ஷர்துல் தாகூர் இருவரும் களத்தில் நின்று போராடினர். ஆனாலும் பெரிய அளவு ஸ்கோர் என்பதால் அதனை எட்டுவது கொஞ்சம் சிரமமானதாக இருக்கிறது.

கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 32 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் இக்கட்டான சூழ்நிலை மீண்டும் ரிங்கு சிங் வசம் வந்தது. ஆனால் இந்த கடைசி ஓவரில் கொல்கத்தா அணியால் முழு ஸ்கோரையும் எட்ட முடியவில்லை. இதனால் ௨௩ ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத் அணி.


Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!