பழிவாங்குமா ஆஸி அணி.. இந்தியாவுடனான 2 வதுடெஸ்டில் முதல் பேட்டிங்!

பழிவாங்குமா ஆஸி அணி.. இந்தியாவுடனான 2 வதுடெஸ்டில் முதல் பேட்டிங்!
X
இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் அந்த இடத்தைத் தக்க வைக்க முடியும். இதனால் இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் டேவிட் வார்னரும், கவாஜாவும் துவக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். இவர்களின் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் இந்திய அணி தவித்து வருகிறது. டேவிட் வார்னர் மிகவும் பொறுமையாக ஆடி வருகிறார். கவாஜா 24 ரன்களுடனும், வார்னர் 7 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

இந்திய அணிக்கு மிகப் பெரிய பிளஸ் பாய்ண்ட் அஸ்வின். அவரது சுழலில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் திணறுகிறார்கள். இதே பாணியில் டெல்லி போட்டியிலும் அஸ்வின் திருப்பு முனையாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதுவது இது 104வது முறை. இதற்கு முன் மோதிய போட்டிகளில் 31 முறை இந்திய அணியும், 43 முறை ஆஸி அணியும் வெற்றி பெற்றுள்ளது. 28 போட்டிகள் டிரா ஆனது.

டெல்லி மைதானத்தின் ஆடுகளம் மெதுவான தன்மையுடன் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வறண்டு காணப்படும் ஆடுகளம் பாதி நேரத்தில் பந்து வீசும் அணிக்கு சாதகமாக மாறும். இந்த மைதானத்தில் இந்திய சுழல் வீரர்கள் 336 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை ஷமி, சிராஜ் இருவரும் இருக்கின்றனர். அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் கூட்டணி சுழலில் ஆஸி அணியின் விக்கெட்டுகள் மதியத்துக்கு பிறகு மிக விரைவாக விழும் என்கிறார்கள்.

ப்ளேயிங் 11:

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.

Tags

Next Story