ஒரு டீஸ்பூன் அளவு Corona Virus இதுவரை சுமார் 50 மில்லியன் மக்களை பாதித்துள்ளது

உலகம் முழுவதும் உள்ள மக்களை கொரோனா வைரஸ் பாடாய் படுத்தி வருகிறது. மக்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. உலக மக்கள் பீதியின் பிடியிலிருந்து இன்னும் முழுவதுமாக மீளவில்லை.
உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா வைரசைப் (Corona Virus) பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று உள்ளது. உலகில் அதிக அளவிலான மக்களை பாதிக்க தேவைப்பட்ட கொரோனா வைரஸ் COVID-19-ன் அளவு எவ்வளவு தெரியுமா? ஒரு டீஸ்பூன் அளவு மட்டுமே!! ஆம்!! ஒரு டீஸ்பூன் அளவு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 50 மில்லியன் மக்களை பாதித்துள்ளது.
ஒரு மதிப்பீட்டின்படி, உலகெங்கிலும் உள்ள கொரோனா வைரஸின் மொத்த அளவு சுமார் 8 மில்லிலிட்டர் தான். இது ஒரு ஸ்பூன் கொரோனா வைரஸுக்கு சமமான அளவாகும்.
ஒரு ஸ்பூன் சுமார் 6 மில்லில்டர் திறன் உள்ளது. இதுவரை ஒரு டீஸ்பூன் அளவு கொரோனா வைரஸ் மட்டுமே உலகில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தொற்றை பரப்பியிருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய (Australia) கணிதவியலாளர் மாட் பார்க்கர் இந்த மதிப்பீட்டை அவர் உருவாக்கிய ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் செய்தார். ஒவ்வொரு கொரோனா வைரஸ் நோயாளியின் உயிரணுக்களின் எண்ணிக்கையை மதிப்பிட்டு, பார்க்கர் தனது கணக்கீட்டைத் தொடங்கினார். அவர் இதற்கு ஸ்வாப்களிலிருந்து அளவிடப்படும் வைரஸ் சுமைகளின் அளவை அடிப்படையாகக் கொண்டார்.
ALSO READ: அடுத்து வருகிறது மனிதர்கள் மூலம் வரவும் Chapare Virus: விஞ்ஞானிகள் அளித்த பகீர் Report!!
ஒவ்வொரு நபரும் இரண்டு வாரங்களுக்கு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தினசரி 300,000 பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர் என்ற அனுமானத்தின் அடிப்படையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அவர் கணக்கிட்டார்.
"உலகில் இப்போது இருக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் ஒரு டீஸ்பூன் மதிப்புள்ள இந்த வைரஸ்தான் காரணம்" என்று அவர் தனது போட்காஸ்டில் கூறினார். "ஒரு வைரஸ் துகள் மிகச் சிறியதாக இருக்கும். இது மற்ற உயிரணுக்களை அழிப்பதற்கான குறியீடு மட்டுமே." என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் அளவு மிகவும் சிறியது. அதை நாம் நமது கண்களால் பார்க்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு மனித உயிரணுவின் அளவு சுமார் 100 மைக்ரோமீட்டர் ஆகும். இது நம் தலையில் காணப்படும் ஒரு முடியின் அகலத்திற்கு சமம். மனித உயிரணுக்களின் அளவு கோவிட் -19 வைரஸின் அளவை விட 10 மில்லியன் மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu