சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை: உச்ச நீதிமன்றம்

சிபிஐ விசாரணை தொடர்பாக, உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில், மாநில அரசின் ஒப்புதல் பெறுவது அவசியம் என கூறியுள்ளது.
மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) விசாரணை தொடர்பாக அதன் அதிகார வரம்பு தொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன. இதில், வழக்கு விசாரணையில்,சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து சிபிஐ அனுமதி பெற வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. இப்போது சிபிஐ விசாரணைக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த தீர்ப்பு அரசியலமைப்பின் கூட்டாட்சி தன்மைக்கு வலு சேர்க்கும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. டெல்லி சிறப்பு காவல் சட்டத்தில் (டிஎஸ்பிஇ), அதிகாரங்கள் மற்றும் அதிகார வரம்புகளின் விதிகளின்படி சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதல் கட்டாயமாகும் என்று நீதிமன்றம் கூறியது.
ALSO READ | பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கைது, கண்காணிப்பு வளையத்தில் டெல்லியின் எல்லைகள்
இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது. ஆகவே, டி.எஸ்.பி.இ சட்டத்தின் பிரிவு ஐந்து உறுப்பினர்களின் அதிகாரங்களையும் அதிகார வரம்பையும் மாநிலத்திற்கு அப்பால் யூனியன் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசுக்கு உதவுகிறது. இருப்பினும், டிஎஸ்பிஇ சட்டத்தின் ஆறாவது பிரிவின் கீழ் மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை மாநில அரசு ரத்து செய்யலாம்.
ஊழல் வழக்கில் தங்களுக்கு எதிரான சிபிஐ விசாரணையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்ட சிலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரிவு, இந்த உத்தரவை பிறப்பித்தது. விசாரணைக்கு மாநில அரசிடமிருந்து முன் அனுமதி பெறவில்லை என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.
மாநிலத்தில் விசாரணை நடத்த மத்திய புலனாய்வு கழகத்திற்கு அளித்த அனுமதி, திரும்பப் பெறப்படுவதாகக் கூறி மகாராஷ்டிரா (Maharashtra) அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அரசாங்கம் விசாரணைக்கு அளித்த அனுமதி திரும்பப் பெறுவது தற்போதைய விசாரணையை பாதிக்காது என்றாலும், எதிர்காலத்தில், மத்திய புலானாய்வு கழகம் மாநிலத்தில் ஏதேனும் புதிய வழக்கை விசாரிக்க விரும்பினால், அது நீதிமன்றத்தின் சார்பாக விசாரணைக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.
ஜார்க்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா, வங்காளம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் பஞ்சாப் ஆகியவை புதிய வழக்குகள் குறித்து விசாரிக்க சிபிஐக்கு அளித்த ஒப்புதலை வாபஸ் பெற்றுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu