சில்லறை வர்த்தகத்தில் விரிவாக்கம் அடையும் டாடா டிஜிட்டல்

சில்லறை வர்த்தகத்தில் விரிவாக்கம் அடையும் டாடா டிஜிட்டல்
X
இந்தியாவில் ஆன்லைன் டிஜிட்டல் வர்த்தகத்தில் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது டாடா டிஜிட்டல்.

சில்லறை வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் டாடா குழுமம் ஆன்லைன் வர்த்தகத்தில் டிஜிட்டல் உலகில் இல்லாதது பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய உருவாக்கப்பட்டது தான் டாடா டிஜிட்டல்.

டாடா குழுமம் தனது வர்த்தகத்தை டிஜிட்டல் சேவைத் துறைக்குள் விரிவாக்கம் செய்ய டாடா டிஜிட்டல் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. டாடா டிஜிட்டல் நிறுவனம் அமேசான், பேடிஎம் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டிப்போடும் வகையில் டாடா நியூ என்ற சூப்பர் ஆப்-ஐ கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அறிமுகம் செய்தது. இந்தச் செயலிக்குத் தற்போது ஐபிஎல் போட்டியின் போது பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

டாடா குழுமம் இதைத் தொடர்ந்து அனைத்து ரீடைல் வர்த்தகத்தையும் ஆன்லைன் விற்பனை தளத்திற்குக் கொண்டு வருகிறது. அதை ஒன்றாக இணைத்து டாடா நியூ ஆப்பில் சேர்த்து மக்களுக்கு சேவை அளிக்கிறது டாடா டிஜிட்டல். இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக வளர்ந்தது வரும் டாடா குழுமம். இந்தியாவில் ஆன்லைன் டிஜிட்டல் வர்த்தகத்தில் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

Tags

Next Story
மனித நலன் முதல் வணிக வெற்றிவரை சிறப்பாக செயல்படும் AI!