சுகுணா அறிமுகம் செய்த 'Delfrez': பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை

சுகுணா அறிமுகம் செய்த Delfrez: பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்பனை
X

கோப்பு படம் 

கறிக்கோழித்துறையில் முன்னணி நிறுவனமான சுகுணா, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை, 'Delfrez' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

கறிக்கோழி உற்பத்தித் துறையில் முன்னணியில் விளங்குகிறது, சுகுணா பவுல்டரி நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது, பதப்படுத்தப்பட்ட கோழி மற்றும் ஆட்டிறைச்சி பொருட்கள் மற்றும் முட்டைகளை, டெல்ஃப்ரெஸ் (Delfrez) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதனை ஆன்லைனிலும் , நேரடியாகவும் விற்பனை செய்ய உள்ளது.

இது குறித்து, அதன் நிர்வாக இயக்குனர் விக்னேஷ் சௌந்தரராஜன் கூறியதாவது: புதிய பிராண்ட் ஆன டெல்ஃப்ரெஷ் உற்பத்தி பிரிவுக்கென, சுகுணா நிறுவனம், ரூ. 100 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது; அத்துடன், வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 1,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

சுகுணாவிற்கு தற்போது மூன்று தென் மாநிலங்களில் 250 சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன. மேற்கு மற்றும் வட மாநிலங்களில் அடுத்த நான்கு முதல், ஆறு மாதங்களில், 40 விற்பனை நிலையங்களை ஏற்படுத்தி, அவை Delfrez என மறுபெயரிடப்படும். சுகுணா ஃபுட்ஸ் நான்கு முக்கியப் பிரிவுகளை கொண்டுள்ளது. அவை, சுகுணா சிக்கன், சுகுணா ஃபீட்ஸ், டெல்ஃப்ரெஸ் மற்றும் மதர்ஸ் டிலைட் என்பதாகும்.

எங்களுக்கு நேரடி கோழி உற்பத்தியாளர் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்புவாய்ந்த தொடர்புகள் உள்ளன. பதப்படுத்தப்பட்ட சிக்கன், ஆட்டிறைச்சி மற்றும் முட்டைப் பொருட்களை, மறுபெயரிடுவதன் மூலம், ஃபார்ம்-டு ஃபோர்க் என்பதில் கவனம் செலுத்த விரும்புகிறோம். தற்போது, எங்கள் வணிகத்தில் சுமார் 5% பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் உள்ளன. இவை, வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 20% ஆக பங்களிக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவில் எங்கள் வணிகத்தை அதிகரிப்பதுடன், இந்த புதிய, புத்துணர்ச்சியூட்டும் பிராண்ட் உத்தியுடன், உலகளவில் எங்கள் சந்தைப் பங்கை விரிவுபடுத்துகிறோம். இவ்வாறு விக்னேஷ் செளந்தரராஜன் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்